இலங்கையில் இன்றும் 21 பேர் கொரோனாவுக்குப் பலி

இலங்கைக்குள் இன்று மேலும் 21 பேர் கொரோனாவினால் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நாட்டில் மொத்த கொரோனா மரண எண்ணிக்கை 962 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை வெளிநாடுகளில் இருந்து வந்த அறுபத்து மூன்று பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையும் சேர்த்து இன்று இலங்கையில் கொரோனா தொற்றாளிகளாக 2275 பேர் கண்டறியப்பட்டனர்.