இலங்கைக்கு தற்போது 11 நண்பர்கள் மட்டுமே – டுவிட்டரில் மங்கள விமர்சனம்

இலங்கைக்கு தற்போது 11 நண்பர்களே உள்ளனர் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர்மங்கள சமரவீர டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அவர் அதில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

“2015 இல் இலங்கை தனது சொந்த நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்வைத்தது. இதன் போது சீனா ரஸ்யா உட்பட முழு நாடுகளும் எங்களிற்கு ஆதரவாக அணிதிரண்டன.

தற்போது இலங்கைக்கு 11 நண்பர்கள் மாத்திரமே உள்ளனர். தங்களின் ஏதேச்சதிகாரங்களில் இடம்பெறும் அநீதிகளை மறைப்பதற்காக அவர்கள் மனித உரிமை பேரவை தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்” எனவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.