இருவாரங்களாக தொடரும் அன்னை அம்பிகையின் போராட்டம்

463 Views

சிறீலங்காவில் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு தொடர்ந்து நீதி மறுக்கப்பட்டு வரும் இனத்துக்கான சர்வதேச நீதியை கோரி பொறுப்புவாய்ந்த பிரித்தானிய அரசிடமும் கோரிக்கையை முன்வைத்து பசித்திருந்து போராடும் அம்பிகையின் அறப்போர் மாபெரும் மக்கள் புரட்சிக்கு வித்திட்டுள்ளது.

அன்னை அம்பிகை ஆரம்பித்த உணவு தவிர்ப்புப்  போராட்டம் இன்றுடன் 16 நாட்களை அடைந்துள்ளது.

இந்நிலையில், அம்பிகையின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும்  அவரை காப்பாற்ற வேண்டுமெனவும் உலக அரங்கிலிருந்து பிரித்தானியாவுக்கு பல்வேறு அழுத்தங்கள் எழுந்துள்ளதுடன், பிரித்தானியாவில் இன்று மாபெரும் மக்கள்  எழுச்சி பேரணியொன்றும் நடைபெறவுள்ளது.

பிரித்தானிய தொழிற் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்  Sam Tarry (Ilford south MP)     அம்பிகையின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

அதே நேரம் அன்னை அம்பிகையின் போராட்டத்திற்கு தாயகத்திலும் ஆதரவு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply