இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனாவுக்கு இன்று பலியாகியுள்ளனர்.
சிலாபத்தை சேர்ந்த, 66 அகவைக்கொண்ட பெண், கொழும்பு 13ஐ சேர்ந்த 67 அகவைக்கொண்ட ஆண் ஆகியோரே மரணமானதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இலங்கையில் கொரோனா மரண எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளையில் இலங்கையில் இன்று மாத்திரம் 878 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். இவர்கள் அனைவரும் தொற்றாளிகளுக்கு ஊடாக தொற்றுக்கு ஆட்பட்டவர்கள் என்று இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.
இந்தளவுக்கு அதிக கொரோனா தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும்.