இராணுவ முகாம்களை அகற்றினால் மேலும் பல மனித புதைக்குழிகளை காணலாம்

இராணுவ முகாம்களை அகற்றினால், மேலும் பல மனித புதை குழிகள் வெளிப்படும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று முற்பகல், மன்னார் பசார் பகுதியில் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தினால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து வெளியிட்ட மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் தலைவி மனுவல் உதயச்சந்திரா இவ்வாறு தெரிவித்துள்ளார்.