இராணுவ புலனாய்வு பிரிவின் மேஜர் மொஹமட் நிசார் இம்ரான் கைது – பொருட்களும் கைப்பற்றப்பட்டன

இராணுவ புலனாய்வு பிரிவின் மேஜராகக் கடமையாற்றும் நபர் ஒருவர், அடிப்படைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மொரட்டுவ- சொய்சாபுர தொடர்மாடி குடியிருப்புப் பகுதியில் வைத்தே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் ஜோன் வோல்க் என்றழைக்கப்படும் மொஹமட் நிசார் இம்ரான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரிடமிருந்து இராணுவத்தினர் பயன்படுத்தும் 3 ஆடைகள், வாள், ட்ரோன் கமெரா, கையடக்கத் தொலைபேசி, ​கமெராக்கள் 2, மடிகணினி 2 என்பன பொலிஸ் விசேடப் படையணியால் ​மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் சந்தேகநபர் மேலதிக விசாரணைகள் மேற்கொள்வதற்காக, ஒருங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply