இன்று மாவீரர் நாள் – உலகம் எங்கும் உணர்வுடன் நினைவுகூரப்படுகின்றது

இன்று கார்த்திகை 27 ஆம் தேதி, தமிழர்களின் இழந்த மண்ணை மீற்பதற்காகவும், எதிர்கால சந்ததியினருக்கு அமைதி மற்றும் சுதந்திரமாக வாழ்வை பெற்றுக் கொடுப்பதற்குமான உன்னத நோக்கத்திற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த தமிழ் வீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துகிறோம். இந்த தமிழ் வீரர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு, தமிழ் மக்கள் தங்களை கண்ணியத்துடனும் பெருமையுடனும் ஆளக்கூடிய எதிர்காலத்திற்கான அடித்தளத்தை நிறுவியுள்ளது.

மாவீர்களை நினைவு கூர்வதென்பது வெறும் ஒரு சடங்கு அல்ல. மாவீரர்களை நினைவு கூர்வதின் பெறுமதி என்பது வரலாற்றில் வைத்து அதைப் புரிந்து கொள்ளல் என்பதே அதன் உண்மையான உள்ளடக்கம் ஆகும்.

அது தலைமுறை கடந்து இலக்கை அடையும்வரை போராடுதல் என்பதனை ஒன்றிணைக்கும் ஒரு தொடர் இயக்கமாகும். எனவே, இந்த வருட மாவீரர் நாளையும் அதற்கேயுரிய அரசியல் உள்ளடக்கங்களுடன், எழுச்சியுடன், உணர்வு பூர்வமாக ஒற்றுமையுடன் நினைவு கூர்வோம்.