357 Views
அமெரிக்க இராஜாங்கச்செயலாளர் மைக் பொம்பியோ இரண்டுநாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இன்று கொழும்புக்கு வருகை தரவுள்ளார்.
அமெரிக்க ராஜாங்கச் செயலாளரின் இலங்கை விஜயத்தின்போது அவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ர்ம்பின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்க உயர் அரச அதிகாரி ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பமாகவும் இது அமைந்துள்ளது.