அனைத்துலக சிறுவர் நாள் -எம் தமிழீழக் குழந்தைகள் என்ன கூழாங்கற்களா?

இன்று (1.10.2023) அனைத்துலக சிறுவர் நாள்!  இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள்!

பூமியில் வந்துதிக்கும் அத்தனை குழந்தைகளும் நலமாக வளமாக வாழ வேண்டி வாழ்த்துகின்றேன்!

அவர்கள் எங்கு வாழும் சிறுவரானாலும், எந்த இனமானாலும் எந்த தேசமானாலும் அமைதியான அன்பான சூழலில் இனிமையாக மகிழ்வாக வாழ வேண்டும்!

இன்றைய நாளில் உலகச்சிறுவர்களின் நலன் பற்றி சிந்தித்து அக்கறையுடன் பேசும் உலகத்திற்கு

போரினால் பாதிக்கப்பட்ட இனப்படுகொலைகளிற்கு உள்ளாக்கப்பட்ட எங்கள் தமிழீழ மண்ணின் சிறுவர்களின் அவலங்கள் மட்டும் ஏனோ இந்த உலகிற்குத் தெரியவில்லை!

எம் குழந்தைகள் மீது கட்டவிழ்க்கப்பட்ட இனப்படுகொலைகள் பற்றியோ இன்றுவரை தொடரும் அவர்கள் மீதான இனவாத அடக்குமுறைகள் பற்றியோ அக்கறையின்றி, அது குறித்துப் பேச மனமின்றிப் பாரா முகத்தோடு இந்தப் பாழும் உலகம் இரக்கமின்றிப் போனது ஏன்?

இன்றைய நாள் எங்கள் தேசத்தின் செல்வம் பாலச்சந்திரனின் பிறந்த நாள்!

bala son of20prrabaharan அனைத்துலக சிறுவர் நாள் -எம் தமிழீழக் குழந்தைகள் என்ன கூழாங்கற்களா?மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்ட அன்புச் செல்வம் பாலச்சந்திரன் உள்ளிட்ட எங்கள் மண்ணில் இனவாத அரச படையினரால் கருவிலுள்ள சிசு முதல் பச்சிளம் பாலகர் வரை இனப்படுகொலைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட எம் அத்தனை குழந்தைகளிற்கும் நீதியைப் பெற உலகின் மனசாட்சியை உலுப்புவோம்!

உலகக் குழந்தைகள் தான் குழந்தைகளா?

எம் தமிழீழக் குழந்தைகள் என்ன கூழாங்கற்களா?

சிவந்தினி பிராபாகரன்