இனிவரும் ஆளுநர்களும் தமிழர்களாகவே இருக்க வேண்டும் – வடக்கு ஆளுநர்

423 Views

ஆளுநராக நான் வகிக்கும் பதவி இன்னும் 4 மாதங்களாக கூட இருக்கலாம். ஆனால்,இனிவரும் ஆளுநர்களும் தமிழர்களாகவே இருக்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்பையும் துன்பங்களையும் உணர்ந்து செயற்படும் ஆளுநர், அதிகாரிகளே வடக்கிற்கு அவசியமாகும்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் இங்கு அவர் உரையாற்றுகையில், இது தேர்தல் காலம். ஆகவே நான் இந் நிகழ்வில் கலந்துகொள்வது முறையானதா? என நான் தேர்தல் ஆணையாளரிடம் கேட்ட பின்னரே இந் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளேன்.

Leave a Reply