இனப்படுகொலைக்கான ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதியின் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

“பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது தமிழீழத் தேசிய துக்க நாள் சிறப்புரையுடன் இடம்பெற இருக்கின்ற நிகழ்வினை www.tgte.tv நேரஞ்சலாக காணலாம்”

NEW YORK, UNITED STATES OF AMERICA, May 17, 2021 /EINPresswire.com/ —

மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில் இனப்படுகொலை விவகாரங்களுக்கான ஐ.நாவின் முன்னாள் சிறப்பு பிரதிநிதி ( Former UN Special Adviser on the Prevention of Genocide ) Adama Dieng அவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை ( Mullivaikal Memorial lecture ) ஒன்றினை வழங்க இருக்கின்றார்.

ஏழாவது ஆண்டாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளதோடு, உலகளாவிய நினைவேந்தல் நிகழ்வொன்றினை இந்நாளில் ஏற்பாடு செய்துள்ளது.

2012 முதல் 2020 ஆண்டு வரை இனப்படுகொலை விவகாரங்களுக்கான ஐ.நா சிறப்பு பிரதிநிதியாக பணியாற்றிய Adama Dieng அவர்கள், 1995-2001 ஆண்டுகளில் கெய்ரி நாட்டுக்கான ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதியாக பணியாற்றியிருந்தவர்.1982-1990 காலங்களில் அனைத்துலக நீதிபதிகள் ஆணையத்திலும் பங்கெடுத்திருந்தவர் மட்டுமல்லாது, 45க்கும் மேற்பட்ட கருத்தாக்கங்களை பதிப்பாக வெளியிட்டவர்.

பல்வேறு ஆளுமைகளை கொண்ட Adama Dieng அவர்கள் பங்கெடுக்கின்ற முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையானது, 18-05-2021 செவ்வாய்க்கிழமை New York 2 PM / UK : 7 PM / EU : 8 PM நேரத்துக்கு இடம்பெற இருக்கின்றது.
இந்நிகழ்வினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் www.tgte.tv வலைக்காட்சியிலும், இதர உலகத்தமிழ் ஊடகங்கள் வழியாகவும் காணலாம்.

** இதேவேளை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உலகளாவிய நினைவேந்தல் நிகழ்வு நியு யோர்க் நேரம் காலை 10 மணிக்கு (UK : 7 PM / EU : 8 PM) தொடங்குகின்றது.

பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது தமிழீழத் தேசிய துக்க நாள் சிறப்புரையுடன் இடம்பெற இருக்கின்ற நிகழ்வினை www.tgte.tv நேரஞ்சலாக காணலாம்.

உலகளாவியரீதியில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக நேரடி பொதுநிகழ்வுகளை முன்னெடுப்பது பல நாடுகளில் சவாலாக மாறியுள்ள நிலையில், இணையவழியே உலகளாவிய நிகழ்வாக இவ்விரு நிகழ்வுகளையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்குபடுத்தியுள்ளது.

எமது மக்கள் போரே வாழ்வாகவும், வாழ்வே போராகவும் கொண்டு வாழ்ந்து வந்தவர்கள். பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்ட போதும் விடுதலைப் பயணத்தினைத் தமது தோளேந்தி நின்றவர்கள். முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் பின்னரும் சிங்களத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பி வருபவர்கள். முள்ளிவாய்க்கால நினைவுடன் மே 18இனை, தேசிய துக்க நாளாக நினைவேந்துவது எமது தேசிய உயிர்ப்புணர்வை வலுப்படுதும் செயன்முறையாக இருக்கிறது. இதனால் கொரோனா வைரஸ் பெருந்தொற்;றினால் ஏற்பட்டுள்ள இன்றைய இந்த நெருக்கடியினை நாம் எதிர்கொண்டவாறு, துயர்தோய்ந்த, அவலம் நிரம்பிய முள்ளிவாய்க்கால் கூட்டுநினைவுகளை நமது வீடுகளில் இருந்தவாறு இணைவழியாhக நினைவேந்துவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

– இந்நாளில் வேலைத்தளங்களுக்கோ, அத்தியாவசிய தேவைகளுக்கோ வெளியில் செல்பவர்கள் கறுப்புப்பட்டியணிந்து சென்று எமது மக்கள் பட்ட துயரினை உலகுக்கு வெளிப்படுத்துவோம்.

– ‘இன்னுமொரு முள்ளிவாய்காலை நடக்கவிடமாட்டோம்’ என்ற உறுதியினை எமது அடுத்த சந்ததிகளின் மனங்களில் நிறைய வைக்க, முள்ளிவாய்க்கால் மக்களின் அவலத்தினை நினைவிற் கொள்ளும் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சியினை’ குடும்பமாக உண்போம். இம் «முள்ளிவாயக்கால் கஞ்சி» என்பது எமது மக்கள் பட்ட துயரினை நாம் உள்ளுணர்ந்து அன்றை தினம் எமது விடுகளில் நாம் தயாரித்து உணவாக உட்கொள்ளும் கஞ்சியினைக் குறிக்கும். யூதர்கள் தமக்கென்று ஓர் தேசம் உருவாகிய பின்னரும், கஞ்சி குடித்து தமதினத்தின்; அவலத்தை நினைவு கொள்வதுபோல், முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட கஞ்சிக்கொட்டில்கள் குண்டுமழைக்கும் மத்தியிலும் மக்களின் பசிதீர்த்தது போல் நாமும் முள்ளவாயக்கால் இனவழிப்பு நினைவுநாளில் கஞ்சி உண்டு எமது மக்களின் முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கால வாழ்வியலை காலாதி காலம் நினைவிற் கொள்ளவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மக்களுக்கு அறைகூவல் விடுத்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

** ஊடகங்களுக்கான நேரஞ்சல் இணைப்புக்கு : https://youtu.be/jhsmXffKvz4

Former UN Special Adviser on the Prevention of Genocide Adama Dieng to Deliver 7th Mullivaikal Memorial lecture: TGTE
Link: https://www.einpresswire.com/article/541231602/former-un-special-adviser-on-the-prevention-of-genocide-adama-dieng-to-deliver-7th-mullivaikal-memorial-lecture-tgte

Transnational Government of Tamil Eelam
TGTE
+1 6142023377
[email protected]
Visit us on social media:
Facebook
Twitter