இலங்கை அரசிடம் பேசி இரண்டு ஏக்கர் நிலம் பெற்று மாவீரர் துயிலும் இல்லம் அமைத்து தருவதாக உறுதி அழைத்துள்ளனராம் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் அவர்கள்.
அதற்காக ஈழத்தமிழர்கள் அனைவரும் தங்களை இந்துத்துவா அமைப்புகளில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருகின்றனராம். ஒன்றரை லட்சம் பேரைக் கொன்ற போது எங்கே போனது இந்த இந்துத்துவா சக்திகள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழகத்தின் சினிமா இயக்குனரும் தமிழ் ஆவலருமான இயக்குனர் மு. களஞ்சியம்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
தமிழர்களே வணக்கம்.
தமிழீழத்தில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் அவர்கள், பத்துபேர் கொண்ட தனது பரிவாரங்களோடு கிராமம் கிராமகாக தற்பொழுது இந்துத்துவா பரப்புரை மேற்கொண்டு வருகிறாராம். எனக்கு ஒரு ஈழத்தமிழர் வேதனையோடு பகிர்ந்தார்.
நான் என்ன செய்து விட முடியும்?
போருக்குப் பின் ஏது மற்று,வாழ்க்கை நிலைகுலைந்து போய் நிற்கிற மக்கள் மத்தியில் பல்வேறு பொருளாதார ஆசை வார்த்தைகள் கூறி அவர்களின் மனதை மாற்றுகிறார்கள்.
இலங்கை அரசிடம் பேசி இரண்டு ஏக்கர் நிலம் பெற்று மாவீரர் துயிலும் இல்லம் அமைத்து தருவதாக உறுதி அழைத்துள்ளனராம்.
அதற்காக ஈழத்தமிழர்கள் அனைவரும் தங்களை இந்துத்துவா அமைப்புகளில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருகின்றனராம்.
ஒன்றரை லட்சம் பேரைக் கொன்ற போது எங்கே போனது இந்த இந்துத்துவா சக்திகள்.
ஈழத் தமிழர்களை அழித்தொழிக்க இந்தியாஆயுதங்கள் கொடுத்து உதவிய போது ஏன் தடுத்து நிறுத்தவில்லை?
எங்கிருந்து வந்தது இந்த புதிய கரிசனம்?
புதிய அக்கறை?
இதற்கு யார் காரணம்?
இந்த வரலாற்று பிழையை செய்தவர் யார்?
வேறு யாருமல்ல…அர்ஜூன் சம்பத்தின் இந்த முயற்சிக்கு வித்திட்டவர் உணர்ச்சிப் பாவலர் ஐயா காசி ஆனந்தன் அவர்கள் தான்.
ஈழத்தமிழர்கள் இந்துக்கள் இல்லை சைவர்கள் என்பது ஐயா காசி ஆனந்தன் அவர்களுக்கு தெரியாதா?
இந்தனை ஆண்டு காலமாக சைவர்களாக வாழ்ந்த தமிழர்களை இந்துக்களாக மாற்றுகிற அயோக்கியத்தனத்தை எப்படி அனுமதிப்பது?
சக்திகளை யார் தடுத்து நிறுத்துவது? என தெரிவித்துள்ளார்.