இந்து சமுத்திரபிராந்திய வளைய அமைப்புக்களின் தலைமை இலங்கையிடம்

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ள இந்துசமுத்திர பிராந்திய நாடுகளின் வளை கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இலங்கை ஏற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை இரண்டாவது தடவையாக இந்த பொறுப்பை ஏற்கின்றது. 26 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில் இந்து சமுத்திர பிராந்தியத்தில் உள்ள 23 நாடுகள் உறுப்பினர்களாகவும், 11 நாடுகள் பார்வையாளர்களாகவும் உள்ளன.

இந்துசமுத்திர பிராந்தியத்தின் கடல் பாதுகாப்பு, வர்த்தகம், சூழல் பாதுகாப்பு, சுற்றுலாப்பயணத்துறை போன்றவற்றில் கூட்டுறவை பேணுவதே இந்த அமைப்பின் நோக்கமாகும்.

இலங்கையின் தேசிய நீர்வள ஆய்வு மற்றும் அபிவிருத்தி அமைப்பின் முன்னாள் தலைவர் பேராசிரியர் சுதர்சன் செனிவரத்தினா இதன் தலைவராக உள்ளார். இந்த அமைப்பே 2017 ஆம் ஆண்டு சீனாவுடன் கடல்வள ஆய்வு தொடர்பில் உடன்பாட்டை மேற்கொண்டு சீனாவின் ஆய்வுக் கப்பல்களின் வரவுக்கு காரணமான அமைப்பாகும்.