இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டின்போது இந்தக் கலந்துரையாடல் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இரு தரப்பு திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் கவனம் செலுத்தும் வகையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இலங்கையின் சமகால அரசியல் விடயங்கள் தொடர்பிலும் பேசப்பட்டன என்றும் அறியமுடிகின்றது.