இந்திய மீனவர்களின் ட்றோளர் படகுகள் கடற்படையினரின் பாவனைக்கு

இந்திய மீனவர்களிடம் இருந்து அரச உடமையாக்கப்பட்ட படகுகளில் இருந்து நல்ல நிலையில் உள்ள  6 ட்றோளர் படகுகளை கடற்படையினருக்கு வழங்க ஊர்காவற்றுறை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடற்படையின் வடக்கு பிராந்திய  கட்டளைத் தளபதியின் CAN 029 இலக்க  2021-03-14 ஆம் திகதிய எழுத்து மூலமான கோரிக்கைக்கு 2021-03-19 ஆம் திகதிய DC/MC/kayts/AC/2021 இலக்க கடிதம் மூலம் தமது அனுமதியை ஊர்காவற்றுறை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

நீதி அமைச்சின் செயலாளருக்கு முகவரியிட்டு வட பிராந்திய கடற்படை கட்டளைத் தளபதி, கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர ஆகியோருக்கு பிரதியிட்ட கடிதம் மூலமே இந்த சிபார்சு வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம்
2019ஆம் 2020 ஆம் ஆண்டுகளிலும் 2021 ஆம் ஆண்டுலிம்  கைது செய்யப்பட்ட IND/TN/08/MM/206, IND/TN/08/MM/ 069, IND/TN/08/MM/2394, IND/TN/08/MM/2589, IND/TN/08/MM/242, IND/TN/08/MM/296 ஆகிய இலக்கமுடைய படகுகள் வழக்குகளின்போது  அரச உடமையாக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை வட பிராந்திய கடற்படை கட்டளைத் தளபதியின் CAN 029 இலக்க  2021-03-14 ஆம் திகதிய எழுத்து மூலமான கடிதம் மூலம் தங்களது பாவனைக்கு வழங்குமாறு கோரியுள்ளார்.

இந்த படகுகளை கடற்படையினரிடம் வழங்குவது தொடர்பில் எமக்கு ஆட்சேபனை எதுவுமில்லை. எனவே இது தொடர்பிலான தங்களது மேலான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். என மாவட்ட நீதிபதி/ நீதவான், மாவட்ட நீதவான் நீதிமன்றம், ஊர்காவற்றுறை கையொப்பம் இட்டுள்ளார்.