இந்தியாவைப் போன்ற நிலை இலங்கையிலும் ஏற்படும் – இலங்கை மருத்துவ சங்கம் எச்சரிக்கை

இந்தியாவைப் போன்று இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது என இலங்கை மருத்துவ சங்கம்  எச்சரித்துள்ளது.

நாட்டில் தற்போது காணப்படும் கொரோனா தொற்று நிலைமையானது அதிகரிக்கக் கூடும். இதனைக் கருத்திற்கொண்டு நளாந்த நடைமுறை வாழ்க்கை முறையில் சுகாதார வழிகாட்டுதல்களைச் சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும். இதனைத் தவறும் பட்சத்தில் அண்டை நாடான இந்தியாவைப் போன்ற ஒரு சூழ்நிலையை இலங்கை எதிர்கொள்ள நேரிடலாம் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றாளர் ஒருவர் வீட்டில் அடையாளம் காணப்பட்டால் வீட்டிலுள்ள அனைத்து அங்கத்தவர்களும் நோயாளரும் முகக் கவசம் அணிவது கட்டாயமாகும்.

சரியான முறையில் சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்காவிட்டால் இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் இந்தியாவைப் போன்ற நிலை இலங்கையில் ஏற்பட  அதிக வாய்ப்புள்ளது என வைத்தியர் பத்மா குணரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.