இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கோத்தபயா ராஜபக்ஸ, எதிர்வரும் 29ஆம் திகதி இந்தியா பயணமாகவுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று, சஜித் பிரேமதசாசாவை தோற்கடித்து கோத்தபயா ராஜபக்ஸ வெற்றி பெற்றார்.
இதேவேளை இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்ற கோத்தபயா ராஜபக்ஸ, எதிர்வரும் 29ஆம் திகதி இந்தியா பயணமாகவுள்ளார்.
மோடியின் அழைப்பை ஏற்றே ராஜபக்ஸ இந்தியா செல்லவுள்ளார் என்று இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று(19) மாலை இலங்கை வந்துள்ளார்.
இந்திய பிரதமரின் விசேட பணிப்பின் பேரில், இலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸவை இந்தியாவிற்கு வருமாறு விடுவிப்பதற்காகவே, ஜெய்சங்கர் கொழும்பை வந்தடைந்துள்ளார் என்றும், அவர் இன்றிரவு ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸவை சந்திக்கவுள்ளார் என்பதும், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரை சந்திக்கவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.