இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக கோபால் பாக்லே நியமனம்?

இந்தியாவின் இலங்கைக்கான புதிய உயர் ஸ்தானிகராக சிரேஸ்ட இராஜதந்திரி கோபால் பாக்லே நியமிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக கடமையாற்றிய தரஞ்சித் சிங் சந்து, அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக இதுவரை கடமையாற்றிய தரஞ்சித் சிங் சந்துவிற்கு அண்மையில் கொழும்பில் பிரியாவிடை வைபவம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸ, பிரதமர் மகிந்த ராஜபக்ஸ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் உட்பட பல அரசியல் பிரமுகர்களும் இந்த பிரியாவிடை வைபவத்தில் கலந்து கொண்டனர்.