இந்தியா தனது கடுமையான எதிர்ப்புக்களை தெரிவித்தபோதும், இலங்கை அரசு சீனாவின் ஆய்வுக் கப்பலுக்கு அனுமதியை வழங்கியுள்ளது.
சீனாவின் சி யான்-6 என்ற ஆய்வுக்கப்பல் இலங்கைக்கு அடுத்த மாதம் வரவுள்ளதாகவும், அது இலங்கையின் தேசிய நீர்வள ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவுள்ளது. சீனாவின் உறவு இலங்கைக்கு முக்கியமானது என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்தியா தொடர்ந்து தனது எதிர்ப்புக்களை தெரிவித்து வந்திருந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் இந்திய ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்த சப்ரி சீனாவின் கப்பலுக்கு அனுமதி வழங்கவில்லை என தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது இலங்கை அனுமதியை வழங்கியுள்ளது.