இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி 8

582 Views

8. மூளாய் வைத்தியசாலைப் படுகொலை 05 நவம்பர் 1987

மூளாய்க் கிராமம், யாழ் மாவட்டத்தில் வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேசசெயலர் பிரிவினுள் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு மருத்துவ வசதியினை வழங்கும் இடமாக மூளாய் வைத்தியசாலை அமைந்துள்ளது.

பெரும் இன்னல்களுக்கும்,பெரும் மருத்துவ நெருக்கடிகளுக்கும் மத்தியில் வாழ்ந்த மூளாய்க் கிராமத்து மக்கள், 1987ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐந்தாம் நாள் சிகிச்சைக்காக மூளாய் வைத்தியசாலையில் இருந்தபோது இந்திய இராணுவத்தினரின் பீரங்கித் தாக்குதலிற்குள்ளாகினர். ஐந்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தார்கள். மருத்துவமனையும் சேதமடைந்தது.

கொல்லப்பட்டோரின் கிடைக்கப்பெற்ற விபரம் ( பெயர் தொழில் வயது)

01 நாகர் மகேந்திரன், வியாபாரம், 44
02 கந்தையா மகாதேவன்,சாரதி, 48
03 கந்தசாமி சிறீதரன்,வியாபாரம்,18
04 ஐயாத்துரை பேரின்பநாயகம், ஓய்வூதியம், 58
05 யோசேப் யோகராசா, தொழிலாளி,35

 

 

Leave a Reply