‘இது பௌத்த நாடு’ கமால் குணரெட்னவின் பௌத்த-சிங்கள பேரினவாத கூப்பாடு

விடுதலைப்புலிகள் புத்துயிர்  பெற முயலும் அதேவேளை தங்கள் மதத்தினை பிழையாக விளங்கிக்கொண்டுள்ள தீவிரவாத இளைஞர் குழுவொன்று நாட்டின் அமைதி நிலையை குழப்புவதற்கு முயலும் இந்தவேளையில் இவ்வாறன சக்திகளை கண்காணித்து நாட்டை பாதுகாப்பாக வைத்திருப்பதில் புலனாய்வு அமைப்புகள் ஆற்றவேண்டிய முக்கிய பங்களிப்பு உள்ளது என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண யாழ்ப்பாணத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

யாழ் குடாநாட்டிற்கான விஜயத்தின் போது படையினர்  மத்தியில் உரையாற்றுகையில் அவர் இதனைதெரிவித்துள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

மக்களுக்கு அவரவர் மதங்களை பின்பற்ற உரிமை உள்ளது ஆனால் இது பௌத்த நாடு என்பதை யாவரும் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் கூறினார்

கமால் குணரத்ன இவ்வாறு கூறினாலும் இங்கு இந்து மதத்திற்கு முன்னர் பௌத்தமோ தமிழுக்கு முன்னர் சிங்களமோ இருந்ததாக வரலாறில்லை.இந்த நிலையில் இந்த  ‘பௌத்த நாடு’ என கூற எந்தவிததார்மிக உரிமையும் அவருக்கு இல்லை. அதற்கு மேலாக மத அடிப்படையில் நாட்டை விழிக்க எந்த மதத்திற்கும் உரிமையில்லை.