இங்கிலாந்தில் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் உரையாற்றிய கஜேந்திரகுமார்

நேற்று(2) இங்கிலாந்தில் நடைபெற்ற கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்டார்.

முக்கிய அரசியல் தலைவர்களுடன் பல சந்திப்புகளை மேற்கொண்ட அவர் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் (APPG-T) கன்சர்வேடிவ் உறுப்பினர்களையும் சந்தித்தார்.

தமிழர்களுக்கான கன்சர்வேடிவ் வரவேற்பு நிகழ்வில் கௌரவ விருந்தினராகப் பங்கேற்று, அங்கிருந்த கன்சர்வேடிவ் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆலோசகர்கள் மற்றும் செயற்பாட்டாளர் கள் முன்னிலையில் உரையொன்றை நிகழ்த்திதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Gajan Conver UK2 இங்கிலாந்தில் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் உரையாற்றிய கஜேந்திரகுமார்