357 Views
ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளின் நினைவு தினம் யாழ்ப்பாணம் ஆழியவளை- உடுத்துறையில் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
உடுத்துறையில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்தில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றது.
நினைவுத்தூபிக்கு மலர்மாலையினை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், கட்சிகளின் பிரமுகர்கள் ஆகியோர் அணிவித்தனர்.
நினைவுப்பொதுச்சுடரினை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஏற்ற சமநேரத்தில் உறவினர்களால் சுடரேற்றி, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.