ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளின் நினைவுதினம் முல்லைத்தீவில் அனுஷ்டிப்பு

ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்த உறவுகளின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

முல்லைத்தீவு கடற்கரையில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்தில் இன்று இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது விசேட ஆராதனைகளும், அஞ்சலி நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில் அருட்தந்தையர், அருட்சகோதரிகள், அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள், சுனாமியில் காவுகொள்ளப்பட்டவர்களின் உறவுகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

sdfs ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளின் நினைவுதினம் முல்லைத்தீவில் அனுஷ்டிப்பு

Leave a Reply