ஆயுதத் தொழிற்சாலை அமைப்பது குறித்து இலங்கை – இந்தியா பேச்சு

சிறிய ரக ஆயுதங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைப்பது குறித்து இந்தியாவுடன் பேச்சுகளை நடத்துகிறோம் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவம், இந்தியாவின் பாதுகாப்பு தொழில்துறை ஆகியவை இணைந்த இந்தக் கூட்டு முயற்சி குறித்து இலங்கை அரசாங்கம் பேச்சில் ஈடுபட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஆயுதங்களை உற்பத்தி செய்வதில் இலங்கை இராணுவத்துக்கு நிபுணத்துவம் உள்ளது. உற்பத்தி தொழில்துறை குறித்து கவனம் செலுத்தவேண்டும். நாங்கள் ஏற்கனவே ஆயுதங்களை உற்பத்தி செய்கின்றோம். சிறிய அளவிலேயே அவற்றை செய்கிறோம். தற்போது, நாம் இந்தியாவுடன் பேச்சுகளில் ஈடுபட்டுள்ளோம் – பேச்சுகள் தொடர்கின்றன.

எனினும், இந்தத் தருணத்தில் நாங்கள் இந்தியாவிடமிருந்து ஆயுதங்களை

கொள்வனவு செய்வதற்கான முயற்சிக ளில் ஈடுபடவில்லை. இந்திய – இலங்கை பாதுகாப்பு உறவுகள் சிறந்த நிலையில் உள்ளன. கடந்த இரண்டு தசாப்த காலத்தில் இந்தியாவின் ஆயுத உற்பத்தித்துறை பல மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது – என்றும் கூறினார்.