அவுஸ்திரேலியாவின் ஆதரவுடன் யுனிசெஃப் இலங்கைக்கு மருத்துவ உதவி

512 Views

இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து,  அவுஸ்திரேலியாவின் ஆதரவுடன் யுனிசெஃப் அமைப்பு, அவசர தேவையான ஓக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் பிற முக்கிய உபகரணங்களை கொள்முதல் செய்து இலங்கைக்கு வழங்கியுள்ளது.

மே மாத தொடக்கத்தில் இருந்து இலங்கையில் நோய் பாதிப்பு தினசரி சராசரியாக இரண்டாயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நோய் தொற்றின் எண்ணிக்கை மோசமான சூழ்நிலையை அடையாமல் செய்யவதே  சுகாதார துறையின் முக்கிய பணியாக உள்ளது.

இலங்கைக்கு அவுஸ்திரேலியா அனுப்பியுள்ள 6,2 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் மப்பிலான பொருட்களில், 291 ஒக்ஸிஜன் சிலிண்டர்கள், 342 ஒக்ஸிஜன் ரெகுலேட்டர்கள், பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான 2,490 முகமூடிகள், மற்றும் 20 தீயை அணைக்கும் பொருட்கள் ஆகியவை உள்ளன.

மேலும் இந்த கொரோனா கால உதவியில் சமூக ஒத்திசைவை  மேம்படுத்துதல், ஸ்திரத்தன்மையை மேம்படுத்துதல் மற்றும் பொருளாதார மீட்புக்கும் அவுஸ்திரேலியா ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது.

Leave a Reply