அளுத்மாவத்தையில் மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்

63
83 Views

கொரோனா தொற்றுக் காரணமாக  பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தினால் தமது வாழ்வாரம்  பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து,  மோதரை, இக்பாவத்தை பகுதி மக்கள் அளுத்மாவத்தை வீதியில் ஆர்பாட்டம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.

இப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் நிலைமைகளைக் கட்டுப்படுத்த முயன்றபோதிலும், அதிகளவு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கிருந்து  வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகின்றது.

தொடரும் ஊரடங்கால் தம்மால் தொழில் செய்ய முடியாதிருப்பதாகத் தெரிவித்த ஆர்ப்பாட்டக் காரர்கள், அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 5,000 ரூபா நிவாரணம் தமது குடும்பத்தின் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லாமையால் தாம் பட்டிணி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும்  அரசாங்கம் உடனடியாகத் தமக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here