அரச கால்நடை உற்பத்தி பண்ணையில் முட்டை ஒன்று 16 ரூபாய்க்கு விற்பனை!!

வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள அரச கால்நடை உற்பத்தி பண்ணையில் இன்றயதினம் முட்டை ஒன்று 16 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனோ வைரஸ்தாக்கம் ஏற்பட்ட நிலையில் முட்டை, ரின்மீன், பருப்பு ஆகியவற்றின் விலையை ஜனாதிபதி கோட்டாபய ராயபக்ச குறைத்து உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி முட்டை ஒன்றின் விலை 10 ரூபாயாக குறைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வவுனியாவில் அமைந்துள்ள அரசின் பண்ணையிலேயே முட்டையின் விலை குறைக்கப்படாதநிலையில் 16 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது, இதன்போது அதனை கொள்வனவு செய்த பொதுமக்கள் விசனம் தெரிவித்திருந்தனர்.

இவ்விடயம் தொடர்பாக குறித்த கால்நடை பண்ணையின் பொறுப்பு வைத்தியரிடம் கேட்டபோது முட்டையினை 10 ரூபாவிற்கு விற்பனை செய்யுமாறு உத்தியோகபூர்வமான சுற்றுநிருபம் எவையும் எமக்கு வராதமையினால் குறைத்து விற்கமுடியவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இதேவளை வவுனியாவில் இன்றயதினம் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் சில வியாபாரிகள் 10 ரூபாய்க்கும் சிலர் 20 ரூபாய்க்கும் முட்டையினை விற்பனை செய்திருந்தமை குறிப்பிடதக்கது.