அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டு-செல்வம் எம்.பி கோரிக்கை

அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் ஜனாதிபதி கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் அவர்கள் மீது புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவதானது அந்த நம்பிக்கைக்கு பங்கமாக அமைகிறது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்ட மூலம் மீதான விவாதத்தில் செல்வம் அடைக்கலநாதன் உரையாற்றும் போது,

மேலும் அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கக்கூடிய நிலை காணப்படுதால் அவர்களை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  கேட்டுக் கொண்டார். அதே வேளை, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வடக்கு, கிழக்கில் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளுக்காக அழைத்துள்ளதாகவும் இவ்வாறான செயற்பாடுகளின் மத்தியில் எவ்வாறு இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப் போகின்றார்கள் என்றும் அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.