அமைதிக்காக முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடிய மக்கள்

892 Views

முள்ளிவாய்க்காலில் இலங்கைக்கு அமைதி வேண்டி விசேட பிரார்த்தனை நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்களைக் காவு கொண்ட முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ட வித்தியாலயத்தின் மைதானத்தில் வெள்ளிக்கிழமை (20)  மாலை 6.30 மணி முதல் நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிவரை இவ்விசேட பிரார்த்தனை எழுப்புதலின் துதி ஆராதனைப் பெருவிழா நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

ஆரம்ப நிகழ்வில் இறம்பைக்குளம் ஈஷி மிஷன் ஆலயத்தின் பிரதான பிஷப் பி.எம்.இராஜசிங்கம் விசேட  பிரதிநிதியாகக் கலந்து கொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன், முள்ளிவாய்க்கால் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, போதகர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

 

 

 

Leave a Reply