அமெரிக்க துாதுவா் ஜூலி சங் யாழ்ப்பாண விஜயம் – பல தரப்பினருடனும் பேச்சுவாா்த்தை

19 அமெரிக்க துாதுவா் ஜூலி சங் யாழ்ப்பாண விஜயம் - பல தரப்பினருடனும் பேச்சுவாா்த்தைஇலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு இன்று கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தாா்.

“வடக்கு மாகாணத்தில் உள்ளமக்களுக்கான தொடர்ச்சியான அமெரிக்க ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுக்கான வழிகளை ஆராய்வதற்காகச் சிவில் சமூகம், இளைஞர்கள், உள்ளுர் அரச அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்கள் ஆகியோரின் பலதரப்பட்டகண்ணோட்டங்களைக் கேட்பதற்காக இந்த வாரம் நான் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளேன்” என்று அமெரிக்கத் தூதுவர் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

யாழ். சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் விவசாய மாணவர்களுடன் மறுசுழற்சி மற்றும் பாதுகாப்பு மற்றும் மரங்களை நடுதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு நிகழ்வு இன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.