அமெரிக்க அதிபரின் கடிதம் கோத்தாவிடம் கையளிப்பு – மிலேனியம் சலஞ் உடன்பாடும் உள்ளடக்கம்

சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான செயலாளர் அலிஸ் வெல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிறம்ப் எழுதிய கடிதத்தை சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சாவிடம் கையளித்துள்ளார்.

சிறீலங்காவுடன் அமெரிக்கா மேற்கொள்ளவுள்ள உறவுகள் மற்றும் உதவிகள் தொடர்பான நிபந்தனைகள் அந்த கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொருளாதார அபிவிருத்தி, பயங்கரவாத தடுப்பு ஒத்துழைப்பு, படைத்துறை உடன்பாடுகள், மிலேனியம் சலஞ் உடன்பாட்டு நிதி விவகாரம் போன்ற விடயங்கள் உள்ளடங்கியுள்ள கடிதத்தை கையளித்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய அலிஸ் மிலேனியம் சலஞ் உடன்பாடு தொடர்பில் ஆய்வு செய்வதற்காக கோத்தபாயா அமைக்கும் குழுவை தாம் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.