அமெரிக்கா, யப்பான் மற்றும் பங்களாதேஸ் தூதுவர்கள் கோத்தபாயவைச் சந்தித்தனர்

பெரும்பான்மைச் சிங்கள மக்களின் வாக்குகளின் மூலம் அரச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாய ராஜபக்சாவை அமெரிக்கா, பங்களதேஸ் மற்றும் யப்பான் தூதுவர்கள் இன்று (21) சந்தித்துள்ளனர்.

சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா தெப்லிஸ், பிரதித் தூதுவர் மார்டின் கெலி மற்றும் அரசியல் விவகாரங்களுக்கான அதிகாரி அந்தோனி ரென்சுலி ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

அதேசமயம், யப்பான் தூதுவர் சுகியாமா அகிரா அவரது தூதரக அதிகாரிகள் சகிதம் கோத்தபாயவை சந்தித்து தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, சிறீலங்காவுக்கான பங்களதேஸ் தூதுவர் றியாஸ் கமிதுல்லா கோத்தாபயாவைச் சந்தித்து தனது நாட்டு பிரதமர் மற்றும்அரச தலைவரின் வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் பங்களதேசத்திற்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.