அமெரிக்காவுடன் ஏற்பட்ட இணக்கப்பாட்டை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் – ஜே.வி.பி.

361 Views

அமெரிக்காவுடன் இன்று இணக்கப்பாடு எட்டப்பட்ட விபரங்களை அரசாங்கம் பகிரங்கப்படுத்தவேண்டும் என ஜேவிபி வேண்டுகோள் விடுத்துள்ளது..

ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அமெரிக்கா முன்வைத்த யோசனைகள் குறித்தும் இலங்கை அரசாங்கம் அதில் எவற்றை ஏற்றுக்கொண்டது என்பது குறித்தும் உண்மையை மக்களுக்கு அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்திற்கும் மக்களிற்கும் தெரியப்படுத்தவேண்டும், இந்த உடன்படிக்கைள் ஆட்சியாளர்களின் தனிப்பட்ட சொத்துக்கள் இல்லை என குறிப்பிட்டுள்ள ஜேவிபியின் தலைவர் இநத உடன்படிக்கைகள் நாட்டின் இறைமையுடன் அதன் எதிர்காலம் அதன் சொத்துக்களுடன் தொடர்புபட்டவை என தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திரத்தை ஆதிக்கம் செய்யும் நடவடிக்கைகளில் இலங்கையை இணைத்துக்கொள்வதே அமெரிக்காவின் நோக்கம் என தெரிவித்துள்ள ஜேவிபியின் தலைவர், அரசாங்கம் இலங்கையை எந்த சர்வதேச இராணுவ அமைப்புடனும இணைக்ககூடாது என தெரிவித்துள்ளார்.

Leave a Reply