அனைவருக்கும் இராணுவ பயிற்சி நடைமுறையில் சாத்தியம் இல்லை – சரத் பொன்சேகா

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயல்படுத்த முடியாது என்று முன்னாள் இராணுவ தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு;

“18 முதல் 26 வயதுக்குட்பட்டவர்களுக்கு பயிற்சியளிக்க பெருந்தொகை பணம் தேவைப்படும். ஒருவருக்கு 6 மாதங்கள் பயிற்சியளிக்க 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா செலவாகும். ஒரு இலட்சம் இளைஞர்களுக்கு ஆறு மாத பயிற்சி அளிப்பதற்காக, அரசுக்கு 750 கோடி ரூபா தேவைப்படும்.

இந்தத் திட்டம் தற்போது தங்கள் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள போராடும் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் என்றாலும், நிதி பற்றாக்குறை காரணமாக அது செயல்படாது மற்றும் தளபாட சிக்கல்கள் உள்ளன. அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும், பொதுமக்களுக்கு சேவை செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

Leave a Reply