அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் அரசு விடுவிக்க வேண்டும்- சிறிதரன்

163 Views

அரசியல் கைதிகள் 16 பேரின் விடுதலை என்பது இந்த அரசின் மரண தண்டனைக் கைதியொருவரை விடுதலை செய்யும் வகையில் முலாம் பூசப்பட்ட விடயமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் உடைய விடுதலை தொடர்பில் இன்று  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,

சிறைகளில் இருக்கின்ற அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் அரசு விடுவிக்க வேண்டும்.

சிறைகளில் வாடிய 16 அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஒத்துழைத்த அனைத்து சமூகத்துக்கும் நன்றிகளை கூறும் அதே நேரம் சிறையிலே எதிர்காலத்தை தொலைத்து வாழுகின்ற அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்வதற்கு இந்த அரசாங்கம் முன்வரவேண்டும் என்றும்  அவர் வலியுறுத்தியுள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதியின் விடுதலைக்காக இந்த 16 அரசியல் கைதிகளை விடுதலை செய்துள்ளமை ஒரு முலாம் பூசப்பட்ட ஒரு விடயமாகவே இது அமைந்திருப்பதாக கருதப்படுகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply