அனுரவின் இந்தியப் பயணம்: சஜித் கட்சியை கிண்டலடித்த ரணில்

 

ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) கட்சியின் தலைவர் அனுரகுமார திசநாயக்கவின் இந்தியப் பயணம் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்களை அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க கிண்டலடித்துள்ளதாக சிங்கள வார ஏடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று சனிக்கிழமை வெளியான அந்த வார ஏட்டின் அரசியல் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) கட்சியின் தலைவர் அநுரகுமார திசநாயக்க மற்றும் ஏனையவர்களின் இந்திய பயணத்தின் நோக்கம் என்ன? அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் கேள்வி எழுப்பினார்.

“தேர்தல் நெருங்கும்போது, ​​இந்தியா இது போன்ற செயல்களை மேற்கொள்வது வழமை. ஆனால், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இந்தப் பயணத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுகின்றனர்” என்று தனது வழக்கமான புன்னகையுடன் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.