அடுத்த வருடம் நாமல் பிரதமராவார் – பிரபல ஜோதிடர் கணிப்பினால் அரசியலில் பரபரப்பு

இந்நாள் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவின் மூத்த புதல்வன் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, 2022 ஆம் ஆண்டு செப் டெம்பர் மாதமளவில் இலங்கையின் புதிய பிரதமராகப் பதவியேற்பார் என்று பிரபல ஜோதிடர் விஜித ரோஹன விஜே முனி கணித்துக் கூறியுள்ளார்

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாகப் பதவியேற்பார் என்று தானே முதலில் தெரிவித்தார் எனவும், அதன் பின்னர் ஏனைய ஜோதிடர்கள் கூறினர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்க்ஷ 1986ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி பிறந்துள்ளார் எனவும், அவரது ஜாதகத்தின்படி இலங்கையின் ஜனாதிபதியாகும் கிரக யோகம் இருக்கின்றது எனவும் ஜோதிடர் விஜித ரோஹன விஜேமுனி குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் நாமல் பிறந்த யோகத்தில் சக்திவாய்ந்த கிரகங்கள் எதுவும் இல்லை என்றாலும், அதிஷ்டமான கிரக நிலை ஒன்று இருக்கின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.