அடுத்த கட்ட நகர்வு என்ன? சஜித் இன்று வெளியிடப்போகும் முக்கிய அறிவிப்பு

384 Views

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று ஞாயிற்றுக்கிழமை தனது எதிர்கால அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிக்கவுள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

இதுதொடர்பான நிகழ்வு கொழும்பு கண்காட்சி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் பங்கு கொள்ளுமாறு ஐக்கிய தேசிய முன்னணியின் அனைத்துத் தலைவர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்போது தாம் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானால் நாட்டுக்காக மேற்கொள்ளப் போகும் திட்டங்கள் தொடர்பில் சஜித் அறிவிக்க உள்ளார் என அஜித் பெரேரா குறிப்பிட்டார்.

இதேவேளை, கோட்டாபய ஜனாதிபதியாக இருக்கும் போது சஜித் பிரதமரானால் ஆட்சியை நடத்தி செல்லமுடியாது. ரணில் – மைத்ரி ஆட் சியை போலவே இருக்கும் என்ற கருத்தை மறுத்த அஜித் பெரேரா தனிப்பட்ட எண்ணங்களின் செல்வாக்கு காரணமாகவே அந்த ஆட்சி சிறப்பு பெறவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply