அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று சாதித்த மாணவர்களின் விபரம் வெளியானது!

இந்தாண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர் தரப்பரீட்சைப் பெறுபேறகள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது அகில இலங்கை மற்றும் மாவட்டங்களில் முதலிடத்தைப் பெற்ற மாணவர்களின் முழுமையான விபரங்கள் வெளியாகியுள்ளன.

கணிதப் பிரிவில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் ஆனந்தா கல்லூரியின் மாணவன் தருச சிஹான் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார். அதேவேளை, கணிதப் பிரிவில் பழைய பாடத்திட்டத்தின் கீழ் பின்னவலை தேசிய பாடசாலையின் மாணவன் டி.ஏ.சம்பத் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

கலைப் பிரிவில் பழைய பாடத்திட்டத்தின் கீழ் கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் மாணவன் நிப்புனவிராஜ் முதலிடம் பெற்றுள்ளார்.

வணிக பிரிவில் பழைய பாடத்திட்டத்தின் கீழ் பத்தேகம கிருஸ்து தேவ பாடசாலையின் மாணவன் நிரோஷன் சந்துருவான் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

கொழும்பு பிசப் கல்லூரியின் மாணவி தேசானி நிம்ஹாரா வணிக பிரிவில் பழைய பாடத்திட்டத்தின் கீழ் அகில இலங்கையில் முதலிடம் பெற்றுள்ளார்.

கலை பிரிவில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் தேவி பாலிகா மகளிர் கல்லூரியின் மாணவி தெசானி வெலிகம அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வணிக பிரிவில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் மாணவி ரவிச்சந்திரன் யாழினி மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் இந்து கல்லூரியைச் சேர்ந்த ஜெயாநந்தராசா கிரஷிகன் உயிரியல் விஞ்ஞான பிரிவில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் அகில இலங்கை ரீதியில் இரண்டாவது இடத்தையும் மாவட்ட மட்டத்தில் முதலாவது இடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply