யாழ் நூலகத்தை எரித்தவரின் புதல்வர் யாழ் பயணம் – தேர்தல் திருவிழா ஆரம்பம்

பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக கைத்தொழில் பெருந்தோட்ட அமைச்சர் நவீன் திஸநாயக்கவும், அவரின் குழுவினரும் (10.08) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

காலையில் நாகவிகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர். தங்கள் விஜயத்தை நினைவுபடுத்தும் வகையில், நாகவிகாரை வளாகத்தில் தென்னை மரக்கன்று ஒன்றும் நாட்டி வைக்கப்பட்டது.

அதனைத்  தொடர்ந்து அமைச்சர் மற்றும் அதிகாரிகள் யாழ். நாகவிகாரையின் விகாராதிபதி சாஸ்ரபதி கொங்கல ஸ்ரீ தர்மதேரோவை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டனர்.

இந்த விஜயத்தின் போது நாகவிகாரையின் தேவைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

நவீன் திஸநாயக்காவின் தந்தை காமினி திஸநாயக்க, இவர் சிறிலங்கா அமைச்சரவையில் அமைச்சராக இருந்த போதே யாழ். நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. அத்துடன் மகாவலி அபிவிருத்தி அமைச்சராக இருந்த வேளையிலேயே மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து சிங்களவர்களுக்கு வழங்கினார். குறிப்பாக முல்லைத்தீவின் எல்லை கிராமங்களை ஆக்கிரமித்ததில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.