மொட்டு சின்னத்தில் களமிறங்கும் மைத்திரி! தலைமை வேட்பாளராகும் வாய்ப்பு இல்லை?

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தாமரை மொட்டுச் சின்னத்தின் கீழ் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என அறியமுடிகின்றது. தாமரை மொட்டு அரசியல் கூட்டணியைக் கடந்த காலங்களில் கடுமையாக விமர்சித்து வந்த அவர் தற்போது இந்த முடிவை எடுத்துள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டாலும் தாமரை மொட்டுக் கூட்டணியின் பொலநறுவை மாவட்ட பிரதான வேட்பாளராக அவர் நியமிக்கப்படும் வாய்ப்பில்லையயனவும் மாவட்டத் தலைமைப் பொறுப்பு அவருக்கு வழங்கப்படுவதில் பல உட்கட்சிச் சிக்கல்கள் எழுந்துள் ளன எனவும் அறியமுடிந்தது.

இதற்கிடையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தாமரை மொட்டுடன் கைகோர்க்குமானால் தாம் தனித்துத் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என குமார் வெல்கம எம்.பி. தெரிவித்துள்ளார்.