நந்திக்கடல் எதைப் பேசுகிறது ? – ஜேர்மனியில் நூல் வெளியீடு

உலகில் போராடும் இனங்களின் நியாயப்பாடுகளை இயற்கையே முன்மொழிந்துவிடும். நியாயப்பாடுகளுக்கான முன்மொழிதலைச் செயற்கையாக உருவாக்கவியலாது. நீரும், நிலமும் காற்றும் நெருப்பும் ஆகாயமும் அவற்றை தம்முள் ஏற்று முன்மொழியவேண்டும். அவ்வாறான போராட்டங்களே சந்ததிகள் தாண்டி வரலாறுகளாக நிலைத்துநிற்கும்.

தமிழீழ நிலப்பரப்பின் நந்திக்கடலும் அதன் உள்ளார்த்தமும் அவ்வாறானதே. பெரிதாகப் பேசப்படாத, இயற்கைப் பிறப்பான நந்திக்கடல் ஒரு இனத்தின் வலிகளைத் தன்னுள் உள்வாங்கிவைத்துக்கொண்டு, இன்னொரு தலைமுறையிடம் பேச விளைகிறது. அதுவும் நீண்டகாலத்திற்குத் தன்மௌனத்தை நிலைநிறுத்தாது, பத்து ஆண்டுகளுக்குள்ளேயே நந்திக்கடல் தன் மௌனத்தை உடைக்கிறது.

நீர் அனைத்தையும் கிரகிக்கும் ஆற்றலுடையது. யாரிடம் அடங்கவேண்டுமென்பதையும், யாரை அடக்கவேண்டுமென்பதையும் அது தக்கதருணத்தில் வெளிப்படுத்தும். தலைவர் பிரபாகரனின் ஆயுத மௌனிப்பை ஏற்று, அதை உட்கிரகித்து வைத்திருந்த நந்திக்கடல் தலைவரது மௌனிப்பை ஏற்று அமைதியாகவிருந்தது. ஆனால் மௌனிப்பின் பின்னதான பத்தாண்டுகளுக்குள் அது கிரகித்துக்கொண்ட அவலங்கள் காரணமாக இன்று தனது மௌனத்தை உடைத்ததனூடாக பலரைப் பேசவைத்திருக்கிறது.

எமது நிழல் அரசு அழிக்கப்பட்டுப் பத்துவருடங்களுக்குள் நந்திக்கடல் தனது மௌனத்தை உடைப்பதென்பது எமது போராட்ட நியாயப்பாடுகளுக்கான முன்மொழிதலேயன்றி வேறில்லை.

தாயகத்தில் இன்று நிகழும் இனஅழிப்பு, நிலப்பறிப்பு, வளத்திருட்டு, பெண்களின் நிலை, தொன்ம வழிபாட்டு இருப்பிடங்களின் நிலை,வலிகளைச் சுமத்தல், நிலத்தைத் துண்டாடும் சூட்சுமங்கள், மாணவர் படுகொலைகள்,ஊடகங்களின் நிலை, புலத்துத் தமிழரின் இயங்குநிலை, நந்திக்கடலின் கோட்பாடுகள் உட்பட 32 விடயங்களை ஆதாரங்களுடன் நந்திக்கடல் பேசுகிறது.

போராளிகள், பேராசிரியர்கள், தத்துவவியலாளர்கள், இயற்கைஆர்வலர்கள், தமிழ் சிங்கள ஊடகவியலாளர்கள் ஊடாக தனது மௌனத்தை உடைத்து நந்திக்கடல் பேசுகிறது.

அதனை நாம் உள்வாங்குதலே எமது எதிர்காலச் செயற்பாடுகளை நிர்ணயிக்கும் என்பது திண்ணம். நந்திக்கடல் இன்றைய சாட்சியாக இருந்து தாயகத்தில் நடைபெறும் பல்வேறு விடயங்களை ஆதாரங்களுடன் உங்கள் முன் வைக்கிறது.

அவற்றையே இயற்கையின் தாதுவர்களூடாக யேர்மனியில் நந்திக்கடல் பேசுகிறது.

28.09.2019 சனிக்கிழமை பி.ப 2.30 மணி

முகவரி : Beuthstr.21 , 44147 Dortmund

தமிழீழத் தேசிய உணர்வாளர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

nanthikadal நந்திக்கடல் எதைப் பேசுகிறது ? - ஜேர்மனியில் நூல் வெளியீடு