பிரபாகரனின் பன்முக சிந்தனையும் ஆற்றலும் என்னை வியக்க வைத்தது(நேர்காணல்)-ஓவியர் புகழேந்தி

ஓவியர் புகழேந்தி உலகத்தமிழர்களால் நன்கறியப்பட்ட தமிழின உணர்வாளர். தமிழகத்தின் தஞ்சை மாவட்டம் தும்பத்திக்கோட்டையில் பிறந்த அவர் சென்னை ஓவியக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.தனது உயிரோட்டமான ஓவியங்களால் தமிழீழ விடுதலைப் போராட்ட பரிமாணங்களை பொதுவெளியில் கொண்டு சென்று நிலைநிறுத்தியவர். தொடர்ந்தும் ஈழத்தமிழருக்காக பணியாற்றிவருபவர்.

அவர் எமக்கு வழங்கியிருந்த சிறப்பு நேர்காணலை இங்கு தருகிறோம்.

தங்களின் ஈழ பயணத்தின் போது தாங்கள் மேற்கொண்ட ஓவியப் பயிற்சி மற்றும் ஓவியக் கண்காட்சி பற்றி அறியத் தருவீர்களா?

முதலில் ஓவியக் காட்சி திட்டமிடப்பட்டு கிளிநொச்சி,பளை,பூநகரி,மல்லாவி, முள்ளியவளை, புதுக்குடியிருப்பு, ஆண்டான்குளம், பெரிய பண்டிவிரிச்சான் ஆகிய இடங்களிலும், போராளிகள் தளபதிகள் பார்வையிட வேண்டும் என்பதற்காக கிளிநொச்சி தூயவன் அரசறிவியல் கல்லூரியிலும், பளைப் பகுதியில் தளபதி தீபன் பொறுப்பிலிருந்த ஜி10 என்றழைக்கப்படும் போர் பயிற்சிக் கல்லூரியிலும் நடைபெற்றது.

யாழ். குடா நாட்டில் யாழ்ப்பாண பல்கலைக் கழகம், வடமராட்சி கரவெட்டி அரசடி, தென்மராட்சி சாவகச்சேரி நுணாவில் கிழக்கு ஆகிய இடங்களிலும் சிறப்பாக நடைபெற்று மக்களின் வரவேற்பை பெற்றது.

ஓவியக் காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே இடையிடையே திட்டமிடப்பட்டு கிளிநொச்சியில் பள்ளி மாணவர்களுக்கும், ஓவிய ஆசிரியர்களுக்கும், யாழ்ப்பாணத்தில் கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கும் ஓவியப் பயிலரங்குகள் நடத்தப்பட்டன. யாழ். பல்கலைக்கழக நுண்கலை மாணவர்களுக்கு சிறப்பு விரிவுரையும் நிகழ்த்தினேன்.

ஓவியக் காட்சி திட்டமிடும் போதே என்னை அழைத்து பேசிய தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள், போராளிகளுக்கும் நீண்ட கால ஓவியப் பயிற்சிக்கு திட்டமிட வேண்டும் என என்னைக் கேட்டுக் கொண்டார். அதாவது “உங்கள் கல்லூரியில் நான்கு ஆண்டுகால படிப்பை எப்படி நடத்துகிறீர்களோ அவ்வாறு எங்கள் போராளிகளுக்கு நீங்கள் நடத்த வேண்டும். அதற்கேற்றவாறு திட்டமிடுங்கள்” என்று அண்ணன் பிரபாகரன் கூறினார்.

அதன்படி நான்கு மாத நான்கு கட்ட செய்முறை பயிற்சிக்கு மட்டும் பாடத்திட்டம் தயாரித்தேன். தொடர்ச்சியாக ஒருமாதம் பயிற்சி மூன்று மாதம் இடைவெளி விட்டு மீண்டும் ஒருமாதம் பயிற்சி என நான்கு மாதங்களுக்கு நான்கு கட்ட பயிற்சியாக திட்டமிட்டிருந்தேன்.95436572 3073532789374754 7109476776866217984 o பிரபாகரனின் பன்முக சிந்தனையும் ஆற்றலும் என்னை வியக்க வைத்தது(நேர்காணல்)-ஓவியர் புகழேந்தி

அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் போராளிகள் உள்வாங்கப் பட்டு, தலைவரின் நேரடி கண்காணிப்பில், கிளிநொச்சி தூயவன் அரசறிவியல் கல்லூரியில் போராளிகளுக்கான ஓவியப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. போர் பதற்றம் அதிகரித்த நிலையில், திட்டமிட்டபடி  இறுதிகட்ட ஓவியப் பயிற்சி வகுப்பு  நடைபெறவில்லை.

ஈழப் பயணத்தின் போது, அங்கு உங்களுக்கு மறக்க முடியாத விடயமாக இருந்தது எது என்பதை குறிப்பிட முடியுமா? 

நிச்சயமாக, மறக்க முடியாத விடயம் நிறைய இருக்கிறது. அதில் முக்கியமானது என்றால் இரண்டைக் குறிப்பிடலாம். ஓன்று,  ஓவியக் காட்சி தொடங்குவதற்கு முன்பு என்னையும் என் மனைவி குழந்தைகளையும் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் பொறுப்பாளர் சேரலாதன் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று காண்பித்தார். வல்வெட்டித்துறையில் தலைவரின் இல்லத்தைப் பார்வையிட்டு, பின்னர் புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட பன்னிரெண்டு மாவீரர்களின் நினைவுச் சதுக்கத்தை பார்வையிட அவ்விடத்திற்கு சென்றோம்.

அதற்கு அருகில் ஒரு பெரியவர் நின்று கொண்டிருந்தார். “அவரிடம் சென்று பேசுங்கள் அண்ணா” என்றார் சேரலாதன்.  அவர் அருகில் சென்று வணக்கம் தெரிவித்து “நான் தமிழ் நாட்டிலிருந்து வந்திருக்கிறேன் என்பதைத் தெரிவித்து அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். முகம் மலர்ந்து எனக்கு வணக்கம் தெரிவித்தவர், இந்திய அமைதிப்படை இவ் வல்வெட்டித்துறையில் நடத்திய படுகொலைகளைப் பற்றி விவரிக்கத் தொடங்கினார். திடீரென்று தான் சட்டையைக் கழற்றி, தன் மார்பில் இருந்த தழும்பைக் காட்டி “இதோ பாருங்கள் இந்திய அமைதிப் படை சுட்டதில் ஏற்பட்ட தழும்பு. வலது புற மார்பில் பாய்ந்த குண்டு இடது புற மார்பு வரை கிழித்துக் கொண்டு வெளியேறியதால் உயிர் தப்பினேன். குண்டடிப்பட்டு தப்பியவன் நான் ஒருவன் தான்” என்றார்.

வாகனத்திலிருந்த சேரலாதன் என்னுடைய “உறங்கா நிறங்கள்” ஓவியத் தொகுப்பு நூலை என்னிடம் கொடுத்து, நான் செய்த ‘வல்வைப் படுகொலை’ ஓவியத்தைக் காட்டச் சொல்ல, அப் பெரியவரிடம் காட்டினேன். “இப்படித்தான் முழங்காலில் நிற்க வைத்து, கைகளை பின்னால் கட்டி, மார்பிலே சுட்டார்கள்.” என்றார் ஓவியத்தைப் பார்த்துக்கொண்டே.

94985634 3073146539413379 7361767588239507456 o பிரபாகரனின் பன்முக சிந்தனையும் ஆற்றலும் என்னை வியக்க வைத்தது(நேர்காணல்)-ஓவியர் புகழேந்தி“எங்களுக்கு நிகழ்ந்த கொடுமையை அப்படியே வரைந்திருக்கிறீர்கள்” என்றும் பாராட்டினார். 1999ஆம் ஆண்டு அவ் ஓவியத்தைச் செய்த போது யார் பாதிக்கப்பட்டரோ அவரிடமே அந்த ஓவியத்தைக் காண்பிக்க நேரிடும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை.

அப்போது போராளி சேரலாதன்  “அண்ணே, வேறு எந்த ஓவியருக்கோ, படைப்பாளிக்கோ இல்லாத பெருமை உங்களுக்கு இருக்கிறது. பாதிக்கப்பட்ட ஒருவரே உங்கள் ஓவியப் படைப்பை பார்த்து பாராட்டுவது என்பது வேறு எந்த விருதையும் விட உயர்ந்தது” என்றார்.

மற்றொன்று, மன்னார் மாவட்டம் ஆண்டான்குளத்தில் நடைபெற்ற ஓவியக் காட்சியை பார்வையிட தமிழீழத்தின் முதல் பெண் மாவீரர் 2 ஆம் லெப்டினென்ட் மாலதியின் தந்தை வந்திருந்தார். அவர் இல்லத்திற்கும் என்னை அழைத்தார். நேர நெருக்கடியிலும் மாலதியின் இல்லத்திற்கு சென்றேன். வரலாற்று சிறப்புமிக்க போராளி மாலதியின் தந்தை, சகோதரிகள், சகோதரர் ஆகியோரை சந்தித்து உரையாடியதும், மாலதியின் நினைவைப் பகிர்ந்து கொண்டது முக்கியமானதும் மறக்க முடியாததும் ஆகும்.

தேசியத் தலைவரை நேரில் சந்தித்தவர் என்ற வகையில் அவரின் தேசியப் பற்று மற்றும் மக்கள் நலன் போன்ற உங்களை கவர்ந்த சில விடயங்களை கூற முடியுமா?

தமிழீழத்தில் ஓவியக் காட்சி திட்டமிடப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில்  தேசியத் தலைவர் அண்ணன் பிரபாகரன் அவர்கள் என்னை அழைத்து பேசும் போது, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நடத்த இருக்கும் ஓவியப் பயிலரங்கு குறித்து தமிழ்ச்செல்வன் தலைவரிடம் சொல்லும் போதே போராளிகளுக்கும் ஓவியப் பயிற்சி கொடுக்கலாம் என்று தலைவரிடம் சொல்ல நினைத்தேன். ஆனால் சற்று தயங்கினேன். ஆனால் தலைவர் அவர்கள் என்னிடம், “மாணவர்கள் ஆசிரியர்களுக்கு ஓவியப் பயிற்சி கொடுக்க வேண்டியதுதான்.

அவர்கள் அதை தங்கள் சொந்தத் தேவைக்குத்தான் பயன்படுத்திக் கொள்வார்கள். அதுவும்  முக்கியம். அதைவிட முக்கியம் போராளிகளுக்கு ஓவியப் பயிற்சி வழங்கினால் அது நாட்டுக்குப் பயன்படும். அதனால் அதற்கும் திட்டமிடுங்கள்” என்று கூறிய போது, மிகவும் மகிழ்ந்து நான் முன்பே உங்களிடம் சொல்ல நினைத்தேன் போராளிகளுக்கு எதற்கு ஓவியப் பயிற்சி என்று நீங்கள் நினைத்துவிடக்கூடும் என்று தயங்கியதற்கான காரணத்தை சொன்னேன்.

உடனே தலைவர் அவர்கள் சிரித்துக்கொண்டு, நிச்சயம் அப்படி இல்லை. ஓவியம் தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. எல்லாத் துறைக்கும் அந்த அடிப்படைத் தேவை இருக்கிறது. ஓவிய அடிப்படையை தெரிந்து கொண்டால் நாம் செய்கின்ற  செயலை சிறப்பாக செய்யலாம் என்று தலைவர் சொல்லிக்  கொண்டிருக்கும் போதே… நான் லியார்னாடோ டாவின்சி குறித்த செய்தி ஒன்றை சொல்ல முனைகின்றேன், அதற்குள் தலைவர் பிரபாகரன் லியார்னாடோ “டாவின்சியை எடுத்துக் கொள்ளுங்கள், அவருக்கு ஓவியம் வரைகின்ற ஆற்றல் இருந்ததால் தான் ஹெலியை கீறி வடிவமைத்து ஹெலிகாப்டர் உருவாகக் காரணமாக இருந்தது.

அவருடைய அறிவியல் திறன் சரியாக வெளிப்பட அவருடைய ஓவியத் திறன் துணை புரிந்திருக்கிறது” என்று அவர் கூறிய போது நான் வியப்பில் ஆழ்ந்து போய், அட என்ன மனிதர் இவர், ஓவியத் துறையை சேர்ந்தவர்கள் அல்லது அறிவியல் துறையை சேர்ந்தவர்கள் பெரும்பாலனோருக்கு தெரியாத செய்தியை மிக அழகாக குறிப்பிடுகிறாரே… நான் சொல்ல வந்ததை அவர் சொல்கிறாரே என்று அந்த வியப்பிலிருந்து மீள்வதற்கே நீண்ட நேரம் ஆனது.89920538 2372376709528867 6644475794603114496 n பிரபாகரனின் பன்முக சிந்தனையும் ஆற்றலும் என்னை வியக்க வைத்தது(நேர்காணல்)-ஓவியர் புகழேந்தி

அதேபோல் தமிழீழத்தில் ஓவியக்காட்சி நிறைவுற்ற பின்னர் என்னை அழைத்து “அனைத்து இடங்களுக்கும் செற்றிருக்கிறீர்கள், மக்களை சந்தித்திருக்கிறீர்கள் மக்கள் என்ன சொல்கிறார்கள்” என்று கேட்டார். தமிழீழத்தை ஒரு முன் மாதிரி நாடாக கட்டமைக்கவும் உருவாக்கவும் பல்வேறு செயல்களில் ஈடுபட்டார். அவருடைய பல்துறை அறிவும் பன்முக சிந்தனையும் ஆற்றலும் என்னை வியக்க வைத்தது. இதை ‘தலைவர் பிரபாகரன் பன்முக ஆளுமை’ என்ற நூலில் விரிவாகவே எழுதியுள்ளேன்.

முள்ளிவாய்க்காலில் போர் மௌனிக்கப்பட்ட காலகட்டத்திற்குப் பிற்பாடு ஈழத் தமிழர்களின் நிலை தொடர்பாக உங்கள் படைப்புகள் பற்றி அறியத் தர முடியுமா?

முள்ளிவாய்க்கால் வரை தமிழீழ விடுதலை ஓவியத் தொகுப்பில் 27 ஓவியங்கள் இருந்தன. அதற்கு ‘புயலின் நிறங்கள்’ என்று தலைப்பு வைத்திருந்தோம். முள்ளிவாய்க்காலில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த 2009 மே மாதத்தில் ஓவியங்கள் வரையத் தொடங்கி ஜூன் மாதம் வரை 23 ஓவியங்களை முடித்து மொத்தம் 50 ஓவியங்களோடு “உயிர் உறைந்த நிறங்கள்” என்ற தலைப்பில் ஜூலையில் சென்னையில் ஏழு நாட்கள் காட்சிப்படுத்தினேன்.

இந்த 50 ஓவியங்களிலும் மக்களின் துன்பங்கள், துயரங்கள், வலிகள், வேதனைகள், இழப்புகளை  வெளிப்படுத்தியிருந்தேன். தாயக விடுதலைக்காக போராடிய போராளிகள் குறித்து வெளிப்படுத்த வேண்டும் என்று 2010ஆம் ஆண்டு மேலும் 30 ஓவியங்களை செய்து 80 ஓவியங்களோடு ‘போர் முகங்கள்’ என்ற தலைப்பில் மே 11 முதல் 16 வரை காட்சிப்படுத்தினேன். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் நடைபெற்றன. நோர்வே, சுவிஸ் போன்ற நாடுகளிலும்  நடைபெற்றன. போருக்குப் பிந்திய ஆண்டுகளில் மக்களின் மன ரீதியான சிக்கல்கள் குறித்து 2011லிருந்து 2017 வரை செய்யப்பட்ட 20 ஓவியங்களோடு மொத்தம் 100 ஓவியங்களை பிரித்தானியாவில் காட்சிப்படுத்தினேன்.

ஈழத் தமிழர் உரிமை போராட்டம் வலிமை பெற தமிழ் நாட்டின் உறவுகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து பங்களித்து வந்துள்ளனர். அனால் இன்று அவ்வகை தன்முனைப்பு பெற்ற நடவடிக்கைகள் குறைவடைந்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது. இந் நிலையில் மாற்றம் வர தற்கால இளம் சந்ததியினர் என்ன செய்ய வேண்டும் என எண்ணுகிறீகள்?

தமிழீழத்தில் எப்பொழுதெல்லாம் போராட்டம் தீவிரம் அடைந்ததோ அப்பொழுதெல்லாம் அதற்கு ஆதரவாக தமிழகத்திலும் 1983 தொடக்கம்  போராட்டங்கள் நடைபெற்றன. களமுனை ஏற்படுத்தும் தாக்கம் அப்படிபட்ட போராட்டங்களை செய்ய வைத்தது. களமே அதைத் தீர்மானித்தது. பலர் உயிர்த் தியாகங்களையும் செய்திருக்கிறார்கள்.

முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பிறகு கூட மாணவர்கள் மக்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பு இருந்தது. இனிமேலும் ஈழத் தமிழர்கள் முன்னெடுக்கின்ற போராட்டங்களுக்கு தமிழகம் நிச்சயம் துணை நிற்கும்.96018878 3073887869339246 6067402494063935488 n பிரபாகரனின் பன்முக சிந்தனையும் ஆற்றலும் என்னை வியக்க வைத்தது(நேர்காணல்)-ஓவியர் புகழேந்தி

இளம் தலைமுறை வரலாறுகளை படிக்க வேண்டும். பெற்ற வெற்றிகளை எப்படி கொண்டாடுகிறோமோ அப்படி அடைந்த தோல்விகளையும் படிக்க வேண்டும். அதுதான் படிப்பினைகளைத் தரும். அது நமது இலக்கை அடைய உரமாக இருக்கும்.வெறும் உணர்ச்சி மட்டும் போதாது அறிவுபூர்வ செயற்பாடும் முக்கியம் என்பதை உணர வேண்டும்.

தற்போதைய நிலையில் எமது விடுதலை தொடர்பாக ஈழத் தமிழர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என நீங்கள் கருதுகிரீகள்?

அன்று தமிழீழம் களமாக இருந்தது. இன்று உலகமே களமாக உள்ளது. அந்தக் களத்தை சரியாக கையாளுவதற்கு ஆட்கள் இல்லை. ஆளுமைகள் இல்லை. அது எதிரிக்கு பலமாகவும் தமிழினத்திற்கு பலவீனமாகவும் ஆகிவிட்டது. போராட்டக் களத்தில் சுடுகலன் மட்டுமே ஆயுதம் அல்ல.

இன்றைய காலகட்டத்தில் எத்தனையோ ஆயுதங்கள் இருக்கின்றன. யூதர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கிறது. நம் வரலாறுகளை பல்வேறு நிலைகளில் பதிவு செய்யவும்  படிக்கவும் வேண்டும். பிற இன மக்களின் வரலாறுகளையும் படிக்க வேண்டும். இன்னும் பல பல ஆண்டுகள் இப் போராட்டம் நீடிக்கலாம். ஈழத் தமிழர்கள் மட்டுமே விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க முடியும் என்பதை முதலில் உணர வேண்டும்.