அரிசி தட்டுப்பாட்டால் நிவாரணம் வழங்க முடியவில்லை.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அரிசி தட்டுப்பாடு காணப்படுவதனால் மக்களிற்கு நிவாரணம் வழங்குவதில் பாரிய தாமதம் காணப்படுவதாக கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் இ.மயூரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால் பொதுமக்களிற்கான நிவாரண பணிகளை மேற்கொள்வதில் பாரிய சிக்கல் நிலமை ஏற்பட்டுள்ளது. இதேவேளை நெல்லின் விலையும் 4300 ரூபாய் வரையிலும் ஒரு கிலோ நெல்லு 62.43 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அரிசியின் விலை 98 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனவே முல்லைத்தீவு நெல் சந்தைப்படுத்தும் சபையால் கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்படுள்ள நெல்லினை மக்களுக்கு வழங்குவதற்கு உரிய தரப்புகள் நடவடிக்கையினை முன்னெடுக்கவேண்டும் என மேலும் தெரிவித்தார்.