மன்னார் கடற்படுக்கையில் புதைந்துள்ள பொக்கிஷம்! உறுதி செய்தது அரசாங்கம்

0
20

மன்னார் கடற்படுக்கையில் இயற்கை எரிவாயு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையின் போது இந்த விடயம் உறுதி செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய மன்னாரில் இயற்கை எரிவாயுவிற்கான அகழ்வு நடவடிக்கையை வெகு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மன்னார் கடற்படுக்கையில் 5 பில்லியன் பரல் எண்ணெயும், 9 ரில்லியன் சதுர அடி இயற்கை எரிவாயுவும் இருப்பதாக முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here