போர்க் குற்றங்களுக்கு பொறுப்பு கோட்டாவே: சரத் பொன்சேகா குற்றச்சாட்டு

0
4

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு அப்போது பாதுகாப்புச் செயலராக இருந்த தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே முழுப் பொறுப்புக் கூறவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

நாட்டு மக்களின் ஜனநாயக மரபுக்கமைய ஆட்சிப்பீடம் ஏறியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானங்கள் தொடர்பில் பதிலளிக்க வேண்டும். அத்துடன், மனித உரிமைமீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேசம் ஏற்கும் சுயாதீன விசாரணையை நடத்தியே ஆகவேண்டும்.

மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் ஊழல், மோசடி செய்தவர்களையும், நல்லாட்சியில் ஊழல், மோசடி செய்தவர்களையும் நல்லாட்சியில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவே காப்பாற்றினார். ஊழல், மோசடியாளர்களுக்கு அடைக்கலம் கொடுத்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி தோல்வியடைந்தமைக்கான முழுப்பொறுப்பும் ஏற்கவேண்டும்.

ஊழல், மோசடி விவகாரத்தால்தான் நல்லாட்சி கவிழ்ந்தது. குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனை வழங்கியிருந்தால் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருப்பார். அதேவேளை, நல்லாட்சியும் தொடர்ந்திருக்கும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here