எதிர்க்கட்சி தலைவராக சஜித்;சபாநாயகர் அறிவிப்பு

114
12 Views

பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாச சபாநாயகர் கரு ஜயசூரியவால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

8வது பாராளுமன்றத்தின் 4வது அமர்வு இன்று காலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் கூடியதுடன் ஜனாதிபதியின் சிம்மாசன உரையை தொடர்ந்து பிற்பகல் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

பின்னர் மீண்டும் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய போது எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here