Tamil News
Home செய்திகள் சர்வதேச நாணய நிதிய அறிக்கை வெளியானது! நாளை அமைச்சரவையில் முன்வைப்பு

சர்வதேச நாணய நிதிய அறிக்கை வெளியானது! நாளை அமைச்சரவையில் முன்வைப்பு

இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதிய அறிக்கை வெளிவந்துள்ள நிலையில், அது நாளை திங்கட்கிழமை அமைச்சரவையிலும் அதன் பின்னர் பாராளுமன்றத்திலும் முன்வைக்கப்படவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பான பகுப்பாய்வுகள், புள்ளிவிவர ரீதியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கோவிட்-19 இலங்கையின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்ததுடன், இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை இழப்பு மற்றும் பல கடுமையான முடக்கங்கள் தேவைப்பட்டன.

கோவிட்-19 இன் தாக்கம் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்திற்கும் அதிகமான நிதிப் பற்றாக்குறைக்கு வழிவகுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம், இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த நம்பகமான மற்றும் தெளிவான மூலோபாயம், சமூக பாதுகாப்பை அவசரமாக நடைமுறைப்படுத்துதல், பெறுமதிசேர் வரி மற்றும் வருமான வரிகள் அதிகரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தொடர்பில் பாராளுமன்றத்திலும் விவாதம் இடம்பெறவுள்ளது.

Exit mobile version