Tamil News
Home செய்திகள் வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிய 92 உறவுகள் இதுவரை உயிரிழப்பு

வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிய 92 உறவுகள் இதுவரை உயிரிழப்பு

வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி போராட்டம் மேற்கொண்டு வரும் அவர்களது உறவுகள், அவர்களின் விடுதலையை வலியுறுத்தி, நீண்ட காலமாக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர் .

இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி அவர்களின் உறவினர்கள்,  துன்பங்களையும், துயரங்களையும் சுமந்து வயோதிப ஓய்வு காலங்களில் நோய் வாய்ப்பட்டு வைத்தியசாலைகளிலும், ஏனைய உறவுகளின் பாதுகாப்பிலும் இருந்து வருகின்றார்கள் .

இவ்வாறு தமது உறவுகளைத் தேடியலைந்து 92 உறவுகள் நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் 12 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தமிழர் தாயகத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த போரின் பின் இராணுவத்தினரிடம் தமது உறவுகளை கையளித்து பின் காணாமல் ஆக்கப்பட்ட, இராணுவ புலனாய்வாளர்களினால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தம்மிடம் சேர்க்குமாறு,   சர்வதேசம் மற்றும் ஐ. நா சபையின்   தலையீட்டைக் கோரி   பல போராட்டங்களை அவர்களின் உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version